சென்னை : 2025ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 2025-ம் ஆண்டில் 24 நாட்கள் பொது விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. விடுமுறை நாட்கள் 1881ம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் கீழ் மாநில அரசு அலுவலகங்களுக்கும் தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகள் உட்பட அனைத்து வணிக வங்கிகளுக்கும் 2025ம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டுமே இந்த அரசாணை பொருந்தும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025ம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் மட்டும் எந்த ஒரு பொது விடுமுறையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
The post NO LEAVE NOVEMBER.. 2025-ம் ஆண்டுக்கான 24 நாட்கள் பொது விடுமுறை நாட்களை அறிவித்தது தமிழ்நாடு அரசு !! appeared first on Dinakaran.