டிரைவர் கொலை மூன்று பேர் கைது

 

திருப்புத்தூர், நவ.22: திருப்புத்தூர் அருகே கண்டரமாணிக்கம் செல்லும் சாலை பகுதியில் கடந்த நவ.18ம் தம்பிபட்டியைச் சேர்ந்த முத்து என்பவரின் மகன் முருகன் (35) ஆட்டோ டிரைவர் காயத்துடன் இறந்து கிடந்தார். பின்னர் அவரது உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக சிவகங்கை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த திருக்கோஷ்டியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் போலீசார் முருகனின் மனைவி மற்றும் அவரது நண்பர்கள் சிலரை விசாரணை செய்துள்ளனர். விசாரணையில், சம்பவத்தன்று முருகனின் நண்பர்களான ராஜேஷ் கண்ணா (எ) சோனி (35) மற்றும் ஹரிகிருஷ்ணன் (எ) டேனியல் (25) ஆகிய இருவரும் முருகனை அடித்து விட்டு அங்கிருந்து சென்றது தெரியவந்தது. மேலும், ராஜேஷ் கண்ணாவுக்கும், முருகன் மனைவிக்கும் பழக்கம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், முருகன் மனைவி ஜெனிபர் நிஷா (25), முருகனின் நண்பர்கள் திருப்புத்தூர் காளையப்பா நகரை சேர்ந்த ராஜேஷ் கண்ணா (எ) சோனி, தம்பிபட்டியைச் சேர்ந்த முத்துச்சாமி என்பவரின் மகன் ஹரிகிருஷ்ணன் (எ) டேனியல் (28) ஆகிய 3 பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post டிரைவர் கொலை மூன்று பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: