வனத்துறையினருக்கு தீத்தடுப்பு பயிற்சி

அரூர்,டிச.19: தர்மபுரி வனக்கோட்டம் அரூர் வன விரிவாக்க மையத்தில், மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் தலைமையில், தர்மபுரி வன பாதுகாப்பு படை வனசரக அலுவலர் பெரியண்ணன், வனவர் அசோகன் ஒருங்கிணைப்பில் காட்டுத்தீ தடுப்பு விழிப்புணர்வு குறித்து அரூர், மொரப்பூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி, தர்மபுரி, பாலக்கோடு, பென்னாகரம், ஒகேனக்கல் ஆகிய வனச்சரகங்களில் புதிதாக பணியில் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட வனவர்கள், வனக்காப்பாளர்கள், வன காவலர்களுக்கு, அரூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மற்றும் தீயணைப்பு வீரர்களை கொண்டு காட்டுத்தீ ஏற்படுவதற்கு முன்பும், பின்பும் கையாள வேண்டிய யுக்திகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

 

Related Stories: