தர்மபுரி, டிச.19: சேலம் கோட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் தர்மபுரி மண்டலம் சார்பில், பயிற்சி ஓட்டுனர்களுக்கு விபத்தில்லாமல் வாகனம் இயக்குவது குறித்து பயிற்சி முகாம் நடைபெற்றது. மேலாண் இயக்குநர் குணசேகரன் உத்தரவின்பேரில் பொது மேலாளர் செல்வம் மேற்பார்வையில் இப்பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியில் ஓட்டுனர்களுக்கு விபத்தில்லா பயணம் மேற்கொள்ள அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதிகளுக்கு நேரடியாக அழைத்துச்சென்று, விபத்தைத் தவிர்க்கும் வகையில் பேருந்துகளை இயக்க ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும், ஒவ்வொரு வாரமும் நடைபெறும் பயிற்சியில் கலந்து கொள்ளும் அனைத்து ஓட்டுனர்களுக்கும், பாதுகாப்பான இயக்கம் தொடர்பான ஆலோசனைகள், ஓட்டுநர் பயிற்றுநர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
