பொன்னேரி: பொன்னேரி அடுத்துள்ள, பழவேற்காடு தோணிரேவு கிராமத்தில் சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேல் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. வரலாற்று சிறப்புமிக்க இப்பள்ளியில் தற்போது குறைந்த அளவே மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்கவும், பள்ளியில் பல்வேறு கட்டமைப்பு மற்றும் மாணவர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில், தோணிரேவு அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பாண்டியராஜன் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக அரசு வழங்கும் பள்ளி சீருடையுடன் தனியார் பள்ளி மாணவர்கள் போல பனியன் டி-ஷர்ட் வேண்டி புதிய தலைமுறை அக்னி சிறகுகள் கிராம சேவை மையத்திடம் அணுகினார். அதன்படி, 40 குழந்தைகளுக்கு பச்சை கலர் பனியனும், நீல கலர் கால் சட்டையும் வழங்கப்பட்டது. இதனை அக்னி சிறகுகள் நிறுவனர் கோபாலகிருஷ்ணன் நேரடியாக பள்ளிக்கு சென்று குழந்தைகளிடம் வழங்கினார்.
The post தோணிரேவு அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு வண்ண சீருடைகள் appeared first on Dinakaran.