ரமா ரெட்டிபாளையத்தில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் அரசு பள்ளி கட்டிடம்: எம்எல்ஏ திறந்து வைத்தார்

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சி ராமா ரெட்டிபாளையம் பகுதியில், அரசு தொடக்கப்பள்ளி அமைக்க தேசிய அனல் மின் நிலைய சமூக வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.28 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டிடம் கட்டப்பட்டது. அதன் திறப்பு நேற்று நடைபெற்றது. விழாவிற்கு, மீஞ்சூர் பேரூராட்சி மன்ற தலைவர் ருக்மணி மோகன்ராஜ் தலைமை தாங்கினார். மீஞ்சூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் ஜி.ரவி, பேரூராட்சி துணைத்தலைவர் அலெக்சாண்டர், மீஞ்சூர் பேரூர் கழக செயலாளர் தமிழ் உதயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பள்ளி தலைமை ஆசிரியை மாலினி அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் கலந்துகொண்டு பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தார். விழாவில், முன்னாள் நகர செயலாளர் மோகன்ராஜ், பேரூராட்சி கவுன்சிலர்கள் கவிதா சங்கர், சங்கீதா சேகர், நக்கீரன், பரிமளம் அருண்குமார், குமாரி புகழேந்தி, ஜெயலட்சுமி தன்ராஜ், அபூபக்கர், ரஜினி, டிவிஎஸ் ரெட்டி பள்ளி தலைமை ஆசிரியர் ராமமூர்த்தி, மணிமாறன், தமிழரசன், திமுக நிர்வாகி சாமுவேல், காங்கிரஸ் மாவட்ட செயலாளர் வினோத், சவுரி ராஜன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உட்பட திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

The post ரமா ரெட்டிபாளையத்தில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் அரசு பள்ளி கட்டிடம்: எம்எல்ஏ திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: