வயதான வீரர்கள் விமர்சனத்துக்கு ஜஸ்டின் லாங்கர் பதிலடி

பெர்த்: ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறியதாவது: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளில் தற்போதுள்ள பல மூத்த வீரர்கள் அடுத்த சில ஆண்டுகளில் வரிசையாக ஓய்வு பெறும் வயதை எட்டிவிடுவர். இந்திய அணியை பொறுத்தவரை கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோஹ்லி, அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜாவுக்கு ஆஸ்திரேலிய மண்ணில் இதுவே கடைசி டெஸ்ட் தொடராக இருக்கும் என நினைக்கிறேன். எனினும் இந்திய அணிக்காக பல வெற்றிகளை பெற்று தந்த சாம்பியன் வீரர்களை, நீங்கள் அவ்வளவுதான் என மிக எளிதாக ஒதுக்கி விட முடியாது. ஜாம்பவான்களாக கொண்டாடப் பட்டவர்களுக்கு வயதாகி விட்டால் அவர்களை மக்கள் ஒதுக்கி விடுகிறார்கள். அது சரியல்ல.

விராட் கோஹ்லிக்கு ஆஸ்திரேலியாவில் இது தான் கடைசி தொடர் என்றால் அதை நாம் அனைவரும் மகிழ்ச்சியுடன் பார்க்க வேண்டும். இதே நிலை ரோஹித்சர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜாவுக்கும் பொருந்தும். ஆஸ்திரேலியா அணியும் இதே நிலையில்தான் உள்ளது. ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு குழுவில் உள்ள மிட்செல் ஸ்டார்க், ஹேசில்உட், கம்மின்ஸ் ஆகியோரும் மூத்த பந்து வீச்சு குழுவில் சேர்ந்துவிட்டனர். எனவே அவர்களும் இனி தொடர்ந்து விளையாடுவார்களா? என தெரியாது. எனவே, வாய்ப்பு கிடைக்கும்போதே முடிந்த வரை அதை பார்த்து ரசியுங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post வயதான வீரர்கள் விமர்சனத்துக்கு ஜஸ்டின் லாங்கர் பதிலடி appeared first on Dinakaran.

Related Stories: