இதனிடையே இந்திய ஏ அணிக்கு எதிரான பயிற்சி போட்டியின் போது ஸ்லிப்பில் பீல்டிங் செய்த கில் கட்டைவிரலில் காயம் அடைந்தார். ஸ்கேன் செய்து பார்த்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவர் குணமடைய 2 வாரம் ஆகும் என்பதால் முதல் டெஸ்ட்டில் இருந்து விலகி உள்ளார். அடிலெய்டில் டிச.6ம் தேதி தொடங்கும் பகலிரவு டெஸ்ட்டிற்கு முன் அவர் குணமடைந்து விடுவார் என அணி நிர்வாகம் நம்புகிறது. ரோகித்சர்மா, கில் இல்லாத நிலையில் கே.எல்.ராகுல் முதல் டெஸ்ட்டில், ஜெய்ஸ்வாலுடன் தொடக்க வீரராக களம் இறங்ககூடும் என தெரிகிறது. நியூசிலாந்துக்கு எதிராக கடைசி 2 டெஸ்ட்டில் ராகுல் நீக்கப்பட்டிருந்தார்.
தற்போது ஆஸி.யில் பயிற்சியின்போது ராகுலுக்கு முழங்கையில் அடிபட்டது. இருப்பினும் அவர் உடற்தகுதியுடன் இருந்தால் தொடக்க வீரராக ஆடலாம். இல்லையெனில் அபிமன்யூ ஈஸ்வரன் ஆடும் லெவனில் இடம் பெறக்கூடும் என தெரிகிறது. கடந்த முறை (2020-21ம் ஆண்டு) ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரில் ஆடியபோது 11 வீரர்கள் காயம் அடைந்து விலகினர். இருப்பினும் இந்தியா மாற்று வீரர்களுடன் ஆடி தொடரை வென்றது குறிப்பிடத்தக்கது.
The post ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்; தொடக்க வீரராக களம் இறங்கும் கே.எல்.ராகுல்?: காயத்தால் சுப்மன் கில் விலகல் appeared first on Dinakaran.