நடிகை கஸ்தூரி கைது விவகாரம் வன்முறையை தூண்டும் வகையில் பேசினால் நடவடிக்கை தேவைதான்: வானதி சீனிவாசன் பேட்டி

கோவை: வன்முறையை தூண்டும் வகையில் பேசினால், அதற்கு நடவடிக்கை எடுத்துதான் ஆக வேண்டும் என்று நடிகை கஸ்தூரி கைது குறித்து வானதி சீனிவாசன் தெரிவித்து உள்ளார். கோவையில் பாஜ எம்எல்ஏ வானதி சீனிவாசன் நேற்று நிருபர்களை சந்தித்தார். அப்போது, கோவையில் அர்ஜூன் சம்பத் போராட்டத்தில் மாணவர்கள் கலந்து கொண்டது குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு வானதி சீனிவாசன், ‘கல்லூரி மாணவர்கள், போராட்டத்தில் கலந்து கொள்வது இயல்பான ஒன்றுதான். தமிழ்நாட்டிற்கு ஒரு பாரம்பரியமே உள்ளது. மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தி இருக்கிறார்கள். 18 வயது பூர்த்தியான கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் கலந்து கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை’ என்றார்.

கேள்வி: நடிகை கஸ்தூரி கைது குறித்து? பதில்: வன்முறையை தூண்டும் வகையில் பேசினால், அதற்கு நடவடிக்கை எடுத்துதான் ஆக வேண்டும். இந்த நாட்டில் சட்டம் உள்ளது. சட்டத்திற்கு புறம்பாக யார் நடந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கேள்வி: நீங்கள் பேட்டியளிக்கும்போது விஜய் போட்டோவை ஒருவர் காட்டினாரே? பதில்: இதை எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.சினிமா பிரபலங்கள் யார் அரசியலுக்கு வந்தாலும் அவர்களிடம் ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். இதில் எல்லாரும் சக்சஸ் புல்லாக இருக்கிறார்களா?. கட்சி ஆரம்பித்து காணாமல் போனவர்களும் இருக்கிறார்கள். அது ஒரு பெரிய விஷயம் அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

 

The post நடிகை கஸ்தூரி கைது விவகாரம் வன்முறையை தூண்டும் வகையில் பேசினால் நடவடிக்கை தேவைதான்: வானதி சீனிவாசன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: