திருமணத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி தலைமை தாங்கி தாலி எடுத்து கொடுத்து நடத்தி வைத்தார். இதில் ரவிக்குமார் எம்பி, எம்எல்ஏக்கள் சிந்தனைச் செல்வன், பனையூர் பாபு, ஆளூர் ஷாநவாஸ் மற்றும் ஐசரி கணேஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். விழாவில் திருமாவளவன் பேசியதாவது: தமிழக சட்டமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் எம்எல்ஏக்களின் குரல் வலுவாக ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது.
அமைச்சர்கள் அனைவரும் விசிக எம்எல்ஏக்கள் 4 பேரும், 4 முத்துக்கள் என்று சொல்லும் அளவிலே அனுப்பியிருக்கிறீர்கள். கருத்தியல் தெளிவுமிக்கவர்களாக இருக்கிறார்கள். வாதிடும் வல்லமை பெற்றவர்களாக இருக்கிறார்கள். எம்எல்ஏ பாலாஜி ஏராளமான தரவுகளோடு வந்து சட்டமன்றத்திலே உரையாற்றுகிறார். நான் மிகச்சரியான எம்எல்ஏவை தேர்வு செய்து அனுப்பியிருக்கிறேன் என்று எண்ணி பெருமைப்படுகிறேன்.
ஒரு தலித் இயக்கத்தில் இணைந்து பணியாற்றுவது என்பது, தலித் அல்லாத ஒருவருக்கு பெரிய சவால். விடுதலை சிறுத்தைகள் கட்சி அனைத்து தளங்களிலும் சுற்றி பணியாற்றினாலும் கூட, வேறு எவரையும் விட முன்னணியில் போய் நின்றாலும் கூட, வேறு எவரையும் விட கருத்தியல் வலுவோடு களமாடினாலும் கூட, இன்னும் ஒரு சாதி அமைப்பாகவே பார்க்கின்ற ஒரு பார்வை மண்ணிலே உண்டு.
நமக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை என்று விலகி இருக்க முடியாது. நமக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இருக்கிறது.
நாம் இந்த அரசியலை மாற்றி அமைக்க வேண்டும். இந்த அரசியலில் அதிகாரத்தை தீர்மானிக்கக்கூடியவர்களாக நாம் வளர்ச்சி பெற வேண்டும். தமிழக அரசியலில் இன்னும் சாதிக்க வேண்டியது ஏராளம் இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார். திருமண வரவேற்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், எம்பி, எல்ஏக்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
The post இன்னும் ஒரு சாதி அமைப்பாகவே பார்க்கும் ஒரு பார்வை இருக்கிறது நமக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை என்று விலகி இருக்க முடியாது: திருமாவளவன் பேச்சு appeared first on Dinakaran.