டெல்லி அமைச்சர் திடீர் ராஜினாமா: ஆம்ஆத்மி கட்சியில் இருந்தும் விலகல்

புதுடெல்லி: டெல்லி அமைச்சர் கைலாஷ் கெலாட் திடீர் ராஜினாமா செய்த நிலையில், அவர் ஆம்ஆத்மி கட்சியில் இருந்தும் விலகினார். டெல்லி அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவருமான கைலாஷ் கெலாட், ெடல்லி அரசின் போக்குவரத்து, சட்டம் மற்றும் வருவாய் துறை அமைச்சராக உள்ளார். இந்நிலையில் அவர் ஆம்ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘டெல்லி அரசு தனது பெரும்பாலான நேரத்தை ஒன்றிய அரசுடன் மல்லுக் கட்டிக் கொண்டிருந்தால், டெல்லியில் வளர்ச்சியை காண முடியாது என்பது தெளிவாகத் தெரிகிறது.

இன்னும் ஆம்ஆத்மி கட்சியை நம்பிக் கொண்டிருக்க வேண்டுமா? என்ற சந்தேகமும் எழுகிறது. எனவே ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகுவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. எனவே நான் ஆம் ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறேன்’ என்று கூறியுள்ளார். டெல்லி முதல்வராக இருந்த கெஜ்ரிவால், தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் தற்போது டெல்லி முதல்வராக அடிசி இருந்து வருகிறார். அடுத்த சில மாதங்களில் டெல்லி பேரவை தேர்தல் வரவுள்ள நிலையில், ஆம்ஆத்மி அமைச்சர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post டெல்லி அமைச்சர் திடீர் ராஜினாமா: ஆம்ஆத்மி கட்சியில் இருந்தும் விலகல் appeared first on Dinakaran.

Related Stories: