அன்னூர்,நவ.17: கோவை மாவட்டம், அன்னூர் ஒன்றியத்தில் மசக்கவுண்டன் செட்டிபாளையம் ஊராட்சியில் கடந்த நிதி ஆண்டில் ரூ.89 லட்சம் மதிப்பீட்டில் வரப்பு அமைத்தல், சிறு பாலம் அமைத்தல், மரக்கன்று நடுதல் உள்ளிட்ட 51 பணியில் செய்யப்பட்டன. இப்பணிகள் குறித்த சமூகத் தணிக்கை வட்டார வள அலுவலர் கனகராஜ் தலைமையில் நடைபெற்றது. தணிக்கை அறிக்கை தயாரிக்கப்பட்டு நேற்று ஊராட்சி அலுவலகம் முன் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தணிக்கை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இதில் ஊராட்சித் தலைவர் புஷ்பவதி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பீர்முகமது, ஊராட்சி செயலர் பிரகாஷ், மூத்த உறுப்பினர் ராமசாமி மற்றும் 100 நாள் திட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் தொழிலாளர்கள் பேசுகையில் 100 நாட்களுக்கு வேலை போதுமானதாக இல்லை, எனவே 150 நாட்களாக உயர்த்தி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
The post சிறப்பு கிராம சபை கூட்டம் appeared first on Dinakaran.