லாரி மீது டூவீலர் மோதி டெய்லர் பலி

தர்மபுரி, நவ.15: கடத்தூர் செம்மணஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வாசு(54), டெய்லரான இவர், நேற்று முன்தினம் டூவீலரில் கடைக்கு சென்று விட்டு, மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். கடத்தூர்- ஒடசல்பட்டி கூட்ரோடு அருகே சென்ற போது, திடீரென பிரேக் பிடிக்காததால், சாலையோரம் நின்ற லாரி மீது டூவீலர் பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட வாசு படுகாயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி, வாசு உயிரிழந்தார். இதுபற்றி கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post லாரி மீது டூவீலர் மோதி டெய்லர் பலி appeared first on Dinakaran.

Related Stories: