மருத்துவமனையில் வைகோ திடீர் அனுமதி

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மருத்துவமனையில் நேற்று திடீரென அனுமதிக்கப்பட்டார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நெல்லையில் கடந்த மே 25 தேதி தனது சகோதரர் வீட்டில் தங்கியிருந்தபோது அங்கு கால் இடறி விழுந்ததில் இடது தோளில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டது. சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் கடந்த மே 29ம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவருக்கு டைட்டானியம் பிளேட் வைக்கப்பட்டது. தொடர்ந்து அவர் ஜூன் மாதம் 2ம் தேதி விடு திரும்பினார். மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் அவர் வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். முக்கிய கட்சி நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்து கொண்டு வந்தார். இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வலது கை தோள்பட்டையில் வைக்கப்பட்டிருக்கும் பிளேட்டை அகற்ற, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

The post மருத்துவமனையில் வைகோ திடீர் அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: