டிரம்ப் நிர்வாகத்தின் வெளியுறவு அமைச்சராக மார்கோ ரூபியோ தேர்வு: இந்தியாவின் நண்பர்

வாஷிங்டன்: அமெரிக்காவின் புதிய அதிபரான டிரம்பின் நிர்வாகத்தில் வெளியுறவு அமைச்சராக, இந்தியாவுக்கு நெருக்கமான மார்கோ ரூபியோ தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் வரும் ஜனவரி 20ம் தேதி பொறுப்பேற்க உள்ளார். தற்போது அவரது தலைமையின் கீழ் பதவியேற்க உள்ள புதிய அமைச்சர்கள், உயர் பதவியினர் தேர்வு நடந்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் அடுத்த வெளியுறவு அமைச்சராக மார்கோ ரூபியோவை (53) டிரம்ப் தேர்வு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரூபியோ இந்தியாவின் நண்பராக திகழ்பவர். இந்தியா, அமெரிக்கா நல்லுறவில் விருப்பம் கொண்டவர்.

இதே போல, அடுத்த தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மைக் வால்ட்ஸ் (50) நியமிக்கப்பட்டுள்ளார். இவரும் இந்தியாவுக்கு நெருக்கமானவர். இந்தியா மற்றும் இந்திய அமெரிக்கர்களுக்கான நாடாளுமன்ற குழுவின் தலைவராக பல ஆண்டுகள் பதவி வகித்தவர். ரூபியோ, வால்ட்ஸ் தேர்வு இந்தியாவுக்கு மிகவும் சாதகமானதாக இருக்கும் என நம்பப்படுகிறது. ஆனால் இந்த தேர்வுகள் குறித்து டிரம்ப் அதிகார பரிமாற்ற குழு அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியிடவில்லை.

முன்னதாக, அமெரிக்காவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் நிர்வாகியாக லீ ஜெல்டின் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதராக பெண் எம்பி எலிஸ் ஸ்டெபானிக்கையும் டிரம்ப் தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

The post டிரம்ப் நிர்வாகத்தின் வெளியுறவு அமைச்சராக மார்கோ ரூபியோ தேர்வு: இந்தியாவின் நண்பர் appeared first on Dinakaran.

Related Stories: