ஐப்பசி மாத பிரதோஷம், பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி செல்ல 4 நாள் அனுமதி

வத்திராயிருப்பு : ஐப்பசி மாத பிரதோஷம், பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்கள் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

அதன்படி ஐப்பசி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு நாளை (நவ. 13) முதல் 16ம் தேதி வரை நான்கு நாட்கள் சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.‘‘பக்தர்கள் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே மலையேறிச் செல்ல அனுமதிக்கப்படுவர். கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள நீரோடைகளில் குளிக்கக்கூடாது. இரவில் கோயிலில் தங்க அனுமதி கிடையாது. மழை பெய்தால் கோயிலுக்கு செல்ல வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படும்’’ என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

The post ஐப்பசி மாத பிரதோஷம், பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி செல்ல 4 நாள் அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: