துர்கா கடந்த 2023ல் குரூப் 2 தேர்வு எழுதி முதல்நிலை மற்றும் முதன்மை தேர்வுகளில் வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து, இந்த ஆண்டு நடைபெற்ற நேர்முகத்தேர்வில் 30க்கு 30 மதிப்பெண்கள் எடுத்து நகராட்சி ஆணையராக தேர்ச்சி பெற்றார். காவல் துறையின் முக்கிய பிரிவான எஸ்பிசிஐடியில் அதிகாரியாக பணியாற்றும் வாய்ப்பு வந்தும் தந்தை பணிபுரிந்த நகராட்சி துறையிலேயே பணிபுரிந்து அவருக்கு பெயரும், புகழும் சேர்க்க வேண்டும் என்பதே அவரது லட்சியமாக இருந்தது. இதனால் நகராட்சி ஆணையர் பதவிக்கு விருப்பம் தெரிவித்து அதை தேர்வு செய்தார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையராக துர்காவுக்கு பணி நியமன ஆணையை சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதையடுத்து திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையராக துர்கா நேற்று பொறுப்பேற்றார். அவருக்கு, நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருயை அவரது அலுவலகத்தில் துர்கா நேற்று சந்தித்து புத்தகம் வழங்கி வாழ்த்து பெற்றார்.
The post திருத்துறைப்பூண்டி நகராட்சியில் தூய்மை பணியாளர் மகள் ஆணையராக பொறுப்பேற்பு: கலெக்டரிடம் வாழ்த்து appeared first on Dinakaran.