சிறுமியை கடத்திச்சென்று திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது

குன்றத்தூர்: இன்ஸ்டாகிராம் மூலம் பழகி ஆசை வார்த்தைக்கூறி சிறுமியை கடத்திச்சென்று திருமணம் செய்த வாலிபரை, போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.மதுரவாயலை சேர்ந்த பெற்றோர் கடந்த சில தினங்களுக்கு முன் தனது 17வயது மகளை அழைத்துச் சென்றபோது, பேருந்தில் இருந்து இறங்கி சென்றவர் திடீரென மாயமானதாகக்கூறி குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின்பேரில் குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர்.

அப்போது, செங்கல்பட்டு மாவட்டம், சூனாம்பேடு பகுதியை சேர்ந்த யுவராஜ் (19) என்ற வாலிபர் சிறுமியை கடத்திச்சென்று திருமணம் செய்து கொண்டு பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, குன்றத்தூர் போலீசார், அந்த வாலிபர் மற்றும் சிறுமியை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் பிடிபட்ட நபர் யுவராஜ், சிறுமியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறி உள்ளது. சிறுமி படித்த பள்ளியில் இருந்து சான்றிதழ் வாங்க பேருந்தில் அழைத்து சென்றச்போது, பெற்றோர்கள் கண்ணில் மண்ணை தூவி விட்டு, சிறுமியை யுவராஜ் ஆசை வார்த்தை கூறி அழைத்துச்சென்று திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார், யுவராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சிறுமியை கடத்திச்சென்று திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது appeared first on Dinakaran.

Related Stories: