எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், அவர்களது படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்கதையாகி வருகின்றன. கடந்த 10ம் தேதி நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த 23 மீனவர்களை சிறைப்பிடித்து இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபோன்று மீனவர்கள் கைது செய்யப்படுவது கவலையும், தமிழக மீனவர்கள் மீது மிகுந்த பதற்றத்தையும் ஏற்படுத்துகிறது. எனவே, இந்த விவகாரத்தில் தலையிட்டு இலங்கை அரசிடம் எடுத்துரைத்து மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். மீனவர்கள் மீது தொடரும் கைது மற்றும் வன்முறைக்கு இந்திய அரசு கடும் கண்டனத்தை பதிவு செய்யவும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை: ஒன்றிய அமைச்சருக்கு ஓபிஎஸ் கடிதம் appeared first on Dinakaran.