இது குறித்து முதல்வர் சித்தராமையா கூறும்போது, ‘கர்நாடக மாநில மதுபான விற்பனையாளர்களிடம் வசூல் செய்த பணத்தில் ரூ.700 கோடியை மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றிக்காக அனுப்பி வைத்திருப்பதாக பிரதமர் மோடி பேசி இருக்கிறார். பொய் சொல்லும் பல்கலைக்கழகமாக பாரதிய ஜனதா உள்ளது. அந்த பல்கலையின் வேந்தராக பிரதமர் இருக்கிறார் என்பது அவர் பேசி இருக்கும் கருத்தின் மூலம் உறுதியாகிறது. பிரதமர் மோடிக்கு நான் சவால் விடுகிறேன்.
மதுபான விற்பனையாளர்கள் மூலம் வசூலித்த ரூ.700 கோடியை மகாராஷ்டிரா மாநில தேர்தலுக்கு நாங்கள் அனுப்பி இருப்பதாக கூறும் குற்றச்சாட்டை ஆதாரத்துடன் நிரூபித்தால், அந்த நிமிடமே நான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன். அப்படி நிரூபிக்கவில்லை என்றால், பிரதமர் மோடி அரசியலில் இருந்து ஓய்வு பெற தயாரா? இது தொடர்பாக பொது மேடையில் பிரதமருடன் விவாதிக்க நான் தயாராகவுள்ளேன். பிரதமர் மோடி தயாராகவுள்ளாரா?’ என்றார்.
The post மகாராஷ்டிரா தேர்தலுக்காக ரூ.700 கோடி அனுப்பியதை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகுகிறேன்: பிரதமர் மோடிக்கு முதல்வர் சித்தராமையா பகிரங்க சவால் appeared first on Dinakaran.