அதனால், அவர்கள் இந்த அரசுக்கு எப்போதும் ஆதரவாக இருக்கிறார்கள். ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு உதவ வேண்டும் என்பது பழனிசாமியின் நோக்கம் அல்ல. திமுகவிற்கு அளித்தும் வரும் ஆதரவைக் கண்டு பொறுக்க முடியாமல் அதைக் கெடுக்க வேண்டும் என்று குள்ளநரித்தனமாக, நீலிக் கண்ணீர் வடிக்கிறார் என்பது ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு நன்றாக தெரியும். ஒரே ஒரு கையெழுத்தில் ஒரு லட்சத்து 73 ஆயிரம் ஆசிரியர்களையும், அரசு ஊழியர்களையும் டிஸ்மிஸ் செய்தவர்கள் அவர்கள். 1988 வரை குறைவான சம்பளம் பெற்று வந்த ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு இணையாக 1989ல் ஊதியங்களை உயர்த்தித் தந்தது திமுக அரசு தான். அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் திமுக அரசு அமைந்த காலங்களில் ஆண்டுக்கு ஆண்டு சலுகைகள் வழங்கியுள்ளது.
4 ஊதியக் குழுக்கள் மூலம் அரசு ஊழியர், ஆசிரியர்களின் பொருளாதாரத்தை உயர்த்தியது கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசுதானே. அதே வழியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021ல் முதல்வராக பொறுப்பேற்றது முதல் அரசு ஊழியர் ஆசிரியர்களின் நலன்களைப் பரிவோடு கவனித்து சலுகைகள் வழங்கி வருகிறார். அடுத்தடுத்து அவர்களுடைய கோரிக்கைகளும் அவர்கள் அனைவரும் மகிழும் வகையில் நிறைவேற்றப்படும். சமக்ர சிக்சா அபியான் திட்டத்திற்கு உரிய நிதியை ஒன்றிய அரசு வழங்காத நிலையிலும், 32,500 ஆசிரியர் மற்றும் பணியாளர்களுக்கு செப்டம்பர், அக்டோபர் மாதங்களுக்குரிய ஊதியங்களை உரிய நாளில் வழங்கி பாதுகாத்துள்ளது தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் அரசு. எனவே, பழனிசாமியின் நீலிக் கண்ணீர் நாடகம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் கடும் எதிர்பையும், வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post ஆட்சியிலிருந்தபோது 1,73,000 அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்துவிட்டு அரசு ஊழியர்களை கொச்சைப்படுத்திய எடப்பாடி இப்போது நீலிக்கண்ணீர் வடிக்கிறார்: எடப்பாடிக்கு திமுக கடும் கண்டனம் appeared first on Dinakaran.