இக்கூட்டத்தில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், பாலியல் வன்கொடுமைகளை தடுக்கும் வகையில் ஒன்றிய-மாநில அரசுகள் கடுமையான சட்டங்களை கொண்டுவர வேண்டும், டாக்டர்கள், செவிலியர் சம்பள உயர்வு, ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியம் நிறைவேற்றித்தர வேண்டும் உள்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் பிரேமலதா அளித்த பேட்டி:
தமிழகம் முழுவதும் ஜனவரி முதல் மக்களை சந்திக்க மாபெரும் சுற்றுப்பயணம் செல்ல உள்ளோம். மாநாடு நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். 234 தொகுதிகளிலும் தே.மு.தி.க. சார்பில் தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து, தேர்தல் பணிகளை இன்று முதல் தொடங்கிவிட்டோம். எனது சுற்றுப்பயண திட்டம் குறித்து ஜனவரி மாதத்தில் அறிவிக்கப்படும். அதிமுக-தேமுதிக கூட்டணி ஒற்றுமையாக செல்கிறது. விஜய் நடத்திய மாநாட்டை பார்த்து ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் உடனடி களப்பணியில் ஈடுபட்டு வருவதாக கூறுவது தவறான கருத்து. 2026 சட்டமன்ற தேர்தலில் எங்கள் கூட்டணி வெற்றி பெறும். விரைவில் நடைபெற உள்ள தேமுதிக செயற்குழு-பொதுக்குழு கூட்டத்தில் விஜய பிரபாகர் உள்பட மூத்த நிர்வாகிகள் பலருக்கும் முக்கிய பதவிகள் வழங்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
The post ஜனவரி முதல் சுற்றுப்பயணம்; அதிமுக கூட்டணியில்தான் இன்று வரை இருக்கிறோம்: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பேட்டி appeared first on Dinakaran.