×
Saravana Stores

முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து விவசாய கூட்டமைப்பு நிர்வாகிகள் பல்வேறு சங்கத்தினர் நன்றி

சென்னை: தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர் சங்கத்தினர், காவிரி – வைகை – கிருதுமால் – குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை விருதுநகரில், தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர் சங்க தலைவர் கணேசன் பஞ்சுராஜன், துணைத் தலைவர் அபி ரூபன், செயலாளர் பாலாஜி பவநாசம், இந்தியன் பட்டாசு உற்பத்தியாளர் சங்க தலைவர் ராம் அசோக், செயலாளர் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய குறைவான விலை கொண்ட பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களுக்குக் கடந்த ஆண்டு ஒன்றிய அரசு தடை விதித்ததைத் தொடர்ந்து, தற்போது சீனாவிலிருந்து சிகரெட் லைட்டர்களின் தயாரிப்புக்கான உதிரிபாகங்களின் இறக்குமதிக்கும் ஒன்றிய அரசு அண்மையில் தடை விதித்துள்ளதற்கு, ஒன்றிய அரசை வலியுறுத்தி தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக நன்றி தெரிவித்து, கோரிக்கை மனு அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து, காவிரி – வைகை – கிருதுமால் – குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் மிசா. ச. மாரிமுத்து, செயலாளர் அர்ச்சுணன் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து, விவசாயிகளின் வாழ்வு வளம்பெற காவிரி – வைகை – குண்டாறு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்து, பல்வேறு கோரிக்கைகளை அடங்கிய மனுவை அளித்தனர். அப்போது, அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து விவசாய கூட்டமைப்பு நிர்வாகிகள் பல்வேறு சங்கத்தினர் நன்றி appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Agricultural Federation ,Chennai ,Tamil Nadu Firecrackers and Cap Explosive Manufacturers Association ,Cauvery ,Vaigai ,Kritumal ,Gundaru Irrigation Farmers Federation Executives ,M. K. Stalin ,Tamil Nadu ,Virudhu Nagar, Tamil Nadu ,Agriculture Federation ,
× RELATED மக்களின் மகிழ்ச்சியால் சிலர் வயிறு எரிகிறார்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்