×

நவ.20ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம்..!!

சென்னை: நவ.20ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் நடைபெறும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்;

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் வருகிற 20.11.2024 புதன்கிழமை காலை 10.30 மணி அளவில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் நடைபெறும். அதுபோது உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 2026-ல் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அது குறித்த முன்னேற்பாடுகள் பற்றி இந்த உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post நவ.20ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : DMK ,Chief Minister ,M. K. Stalin ,Chennai ,General Secretary ,Duraimurugan ,High Level Action ,Committee ,Level Action Plan Committee ,DMK High Level Action Plan Committee ,Dinakaran ,
× RELATED ஒவ்வொரு சொல்லிலும் அரசியல் உள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின்