×

நான் முதல்வன் திட்டத்தின்கீழ் 2024-25ஆம் ஆண்டில் 3.50 லட்சம் பேருக்கு பணி வழங்கப்படும் : டி.ஆர்.பி.ராஜா

சென்னை: நான் முதல்வன் திட்டத்தின்கீழ் 2024-25ஆம் ஆண்டில் 3.50 லட்சம் பேருக்கு பணி வழங்கப்படும் என தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். பொறியியல், கலை, அறிவியல் கல்லூரிகளைச் சேர்ந்த 3.50 லட்சம் பேர் பணியமர்த்தப்படுவர். நான் முதல்வன் திட்டத்தில் 38 லட்சம் மாணவர்களுக்கு தொழில் சார்ந்த திறனுடன் பயிற்சிஅளிக்கப்படும். ஆண்டுதோறும் 14 லட்சம் பேர் என்ற வகையில் 38லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

The post நான் முதல்வன் திட்டத்தின்கீழ் 2024-25ஆம் ஆண்டில் 3.50 லட்சம் பேருக்கு பணி வழங்கப்படும் : டி.ஆர்.பி.ராஜா appeared first on Dinakaran.

Tags : D.R.P.Raja ,CHENNAI ,Industries Minister ,T. R. P. Raja ,DRP Raja ,Dinakaran ,
× RELATED கால சூழ்நிலைக்கு ஏற்ப மாற்று பயிர்;...