×

நிலக்கோட்டையில் ஒரு கிலோ மல்லிகை ரூ.2,000ஆக உயர்வு: பூக்களுக்கு நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

திண்டுக்கல்: தொடர்மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக மலர்கள் வரத்து குறைந்ததால் நிலக்கோட்டையில் ஒரு கிலோ மல்லிகை பூவின் விலை ரூ.2000 ஆக உயர்ந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 100 ஏக்கரில் பூக்கள் மட்டுமே விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தொடர்மழை, பனிப்பொழிவு காரணமாக பூக்கள் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நிலக்கோட்டை மலர் சந்தைக்கு பூக்கள் வரத்து குறைந்துள்ளதால் ஒரு மல்லிகை ரூ.1,800 முதல் ரூ.2,000 வரை விற்பனையாகிறது.

முல்லை பூ ரூ.600க்கும், கனகாம்பரம் ரூ.1,000க்கும், பிச்சிப்பூ ரூ.400க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வரத்து குறைந்தபோதும் பூக்களுக்கு நல்ல விலை கிடைப்பதால் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்மழை மற்றும் கடும் பனிப்பொழிவு காரணமாக வருங்காலத்தில் பூக்கள் விலை மேலும் உயரக்கூடும் என்றும் முகூர்த்த நாட்களில் பூக்களின் விலை இரண்டு மடங்காக உயர வாய்ப்பு உள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post நிலக்கோட்டையில் ஒரு கிலோ மல்லிகை ரூ.2,000ஆக உயர்வு: பூக்களுக்கு நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Nilakottai ,Dindigul ,Dindigul district.… ,Dinakaran ,
× RELATED கொடைக்கானலில் பனி பாதிப்பில் இருந்து...