இதில் டூவீலரில் சென்ற சின்னாக்கவுண்டனூர் வீரபாண்டி நகரை சேர்ந்த பெரியசாமி (60) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். பஸ் கவிழ்ந்து திடீரென தீப்பிடித்து மளமளவென எரியத் தொடங்கியது. அவ்வழியாக சென்றவர்கள் ஓடி வந்து, பஸ்சின் கண்ணாடிகளை உடைத்து, பயணிகளை மீட்டனர். இதில் பஸ்சில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த ரோகிணிபிரியா (32), தசரதன்(31), இவாஞ்சலின்(31), கோவையை சேர்ந்த ஜெபின் (33), திருப்பூரை சேர்ந்த தனியார் மருத்துவமனை டாக்டர் முகமது சிராஜூதீன் (30) உள்பட 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். டிரைவர் அசோக்குமார் மற்றொரு வாகனத்தில் ஏறி தப்பி விட்டார். தகவல் அறிந்து சங்ககிரி தீயணைப்பு மீட்பு படையினர் வந்து தீயை அணைத்தனர். அதற்குள் பஸ் முழுவதும் எரிந்து எலும்புக் கூடானது.
இதுகுறித்து பஸ்சில் வந்த சென்னையில் உள்ள வங்கியில் சீனியர் அசோசியேட்டராக பணிபுரிந்து வரும் ஜெபின்(33) என்பவர், சங்ககிரி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். அதில், கிருஷ்ணா டிராவல்ஸ் என்ற தனியார் ஆம்னி பஸ் ஓட்டிய அசோக்குமார் என்ற டிரைவர், சேலம், மகுடஞ்சாவடி அருகே வந்தபோது பஸ்சை அதிவேகமாகவும், இடது புறமும், வலது புறமும் முன்னும், பின்னும் முந்தியும் ஓட்டி வந்தார். மெதுவாக செல்லும்படி பலமுறை சொல்லியும், டிரைவர் கேட்கவில்லை. மேலும், அப்படித்தான் ஓட்டுவேன் எனக்கு யாரும் சொல்லித் தர வேண்டாம். உங்களுடைய வேலையை பாருங்கள் என சொல்லி, கலியனூர் அருகே சாலையில் பஸ்சின் முன்னால் சென்ற டூவீலர் மீது மோதியதில் பஸ் கவிழ்ந்து விட்டது. பயணிகள் அனைவரும், ஜன்னல் வழியாக தப்பித்து விட்டோம். உடனே பஸ் தீப்பிடித்து எரிந்து விட்டது. டிரைவர் அசோக்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து, ஆம்னி பஸ் டிரைவரை தேடி வருகின்றனர்.
The post சென்னையில் இருந்து கோவை சென்ற ஆம்னி பஸ் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தது: முதியவர் பலி; 10 பேர் படுகாயம் appeared first on Dinakaran.