இந்த புதிய உச்சம் நகை வாங்குவோரை கலக்கமடைய செய்து வந்தது. தீபாவளி பண்டிகை முடிந்ததும் தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட தொடங்கியது. நவம்பர் 1ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ.59,080க்கும், 2ம் தேதி சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.58,960 ஆகவும் விலை குறைந்தது. 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. 4ம் தேதி தங்கம் விலை மாற்றமின்றி சவரன் ரூ.58,960க்கு விற்பனையானது.
5ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.58,840க்கும் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக 5 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 வரை குறைந்தது. இந்த விலை குறைவு நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதலை அளித்திருந்தது. 6ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு சவரன் ரூ.58,920க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் தங்கம் விலை மள, மளவென சரிவை சந்தித்தது.
அதாவது, ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1320 குறைந்து, ஒரு சவரன் ரூ.57,600க்கு விற்கப்பட்டது. தினம், தினம் புதிய உச்சத்தை கண்டு வந்த நகை வாங்குவோருக்கு இந்த விலை குறைவு ஆறுதலை அளித்து இருந்தது. அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றன் தாக்கமே விலை குறைவுக்கு காரணம் என்று கூறப்பட்டது. இன்னும் விலை குறைய தான் வாய்புள்ளதாக நகை வியாபாரிகள் கூறி வந்தனர்.
ஆனால், இதற்கு மாறாக நேற்று தங்கம் விலை மீண்டும் அதிகரித்தது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.7,285க்கும், சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு சவரன் ரூ.58,280க்கும் விற்பனையானது. விலை குறைவு ஒரு நாள் கூட நீடிக்காமல், மீண்டும் அதிகரித்தது நகை வாங்குவோருக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல, வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.103க்கு விற்பனையானது.
The post அதிரடி விலை குறைவு ஒரு நாள் கூட நீடிக்கவில்லை தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.680 உயர்ந்தது appeared first on Dinakaran.