×

கிருஷ்ணகிரிஅருகே இளம்பெண் மாயம்

 

கிருஷ்ணகிரி, நவ.8: கிருஷ்ணகிரி அடுத்த காட்டிநாயனப்பள்ளி சிப்பாய் கரியப்பன் தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி சந்தியா (29). இவர்களுக்கு திருமணமாகி 11 வருடங்கள் ஆகிறது. 3 குழந்தைகள் உள்ளனர். சந்தியா அந்த பகுதியில் உள்ள பேக்கரி கடையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். கருத்து வேறுபாடுக காரணமாக, கணவரை பிரிந்த சந்தியா, அதே பகுதியில் தனியாக வசித்து வருகிறார்.

கடந்த 5ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி சந்தியாவின் தந்தை சாமுடி, மகராஜகடை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கிருஷ்ணகிரிஅருகே இளம்பெண் மாயம் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Ghatinayanapalli Sipai Kariyappan Street ,Sandhya ,
× RELATED கிருஷ்ணகிரி நகரில் புத்தாண்டையொட்டி...