அமேசான், பிளிப்கார்ட் வணிகர்கள் மீது அமலாக்க துறை நடவடிக்கை: ஒரே நேரத்தில் 19 இடங்களில் சோதனை


புதுடெல்லி: அமேசான், பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் வணிகம் செய்யும் விற்பனையாளர்களுக்கு தொடர்புடைய 19 இடங்களில் அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தியது. அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகிய நிறுவனங்களின் முக்கிய விற்பனையாளர்கள் மீது மிகப்பெரிய விசாரணையை அமலாக்கத்துறை தொடங்கியுள்ளது. டெல்லி, குருகிராம், ஐதராபாத் மற்றும் பெங்களூரு நகரங்களில் உள்ள விற்பனையாளர்களுக்கு சொந்தமான 19 இடங்களில் இந்த சோதனைகள் நடைபெற்றது. இந்த நிறுவனங்கள் மீது அந்நிய செலவாணி மேலாண்மைச் சட்டம் விதிமீறல் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இது தொடர்பான ஆதாரங்களை சேகரிப்பதற்காக அமலாக்கத்துறை இந்த சோதனையை நடத்தி உள்ளது.

இதுகுறித்து வட்டாரங்கள் கூறுகையில்,அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகியவை தனது அதிகாரத்தை பயன்படுத்தி, பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையை கட்டுப்படுத்தி, மற்ற விற்பனையாளர்களுக்கு தங்களுடைய தளத்தில் சமமான வாய்ப்பை வழங்காமல் உள்ளனர். அந்நிய செலாவணி மேலாண்மை சட்ட விதிகள் மீறப்பட்டுள்ளதாக புகார்கள் வந்தன. சோதனையில் ஆவணங்களை ஆய்வு செய்த பின் அது தொடர்பான நகல்களை எடுத்து சென்றனர் என்று தெரிவித்தன.

The post அமேசான், பிளிப்கார்ட் வணிகர்கள் மீது அமலாக்க துறை நடவடிக்கை: ஒரே நேரத்தில் 19 இடங்களில் சோதனை appeared first on Dinakaran.

Related Stories: