2024-25 காரிப் பருவத்தில் இந்தியாவின் அரிசி உற்பத்தி 119.93 மில்லியன் டன்னை எட்டும்: ஒன்றிய அரசு தகவல்

புதுடெல்லி: நடப்பு காரிப் பருவத்தில் இந்தியாவின் அரிசி உற்பத்தி 119.93 மில்லியன் டன்னை எட்டும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஒன்றிய வேளாண் அமைச்சகம் வௌியிட்டுள்ள அறிவிப்பில், “நாடு முழுவதும் தற்போது முக்கிய காரிப் பருவ அறுவடை நடந்து வருகிறது. நல்ல பருவமழை காரணமாக 2024-25 காரிப் பருவத்தில் இந்தியாவின் அரிசி உற்பத்தி 119.93 மில்லியன் டன்னை தொடும். முந்தைய ஆண்டு காரிப் பருவத்தை விட அரிசி உற்பத்தி 6.67 மில்லியன் டன் அதிகமாக இருக்கும்.

2024-25 காரிப் பருவத்தில் மக்காச்சோளம் உற்பத்தி 25.54 மெட்ரிக் டன்னாக இருக்கும். இது கடந்த ஆண்டு 22.24 மெட்ரிக் டன்னாக இருந்தது. சோளம் உற்பத்தி 2.19 மெட்ரிக் டன்னாக இருக்கும். அதேசமயம் கம்பு உற்பத்தி 9.37 மெட்ரிக் டன்னாக குறையும். 2024-25 காரிப் பருவத்தில் மொத்த உணவு தானிய உற்பத்தி 164.70 மெட்ரிக் டன். இது கடந்த ஆண்டு 155.76 மெட்ரிக் டன்னை விட அதிகமாகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post 2024-25 காரிப் பருவத்தில் இந்தியாவின் அரிசி உற்பத்தி 119.93 மில்லியன் டன்னை எட்டும்: ஒன்றிய அரசு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: