தமிழ்நாடு மலையேற்ற திட்டம் ட்ரெக்கிங் செல்பவர்களிடையே நல்ல வரவேற்பு: அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழ்நாடு மலையேற்ற திட்டம் ட்ரெக்கிங் செல்பவர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இயற்கை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தவும், வனப்பகுதியை ஒட்டியுள்ள உள்ளூர் மக்களுக்கு நிலையான வாழ்வாதாரத்தை ஏற்படுத்தவும், வனம் மற்றும் வன உயிரின பாதுகாப்பிற்கு வலுசேர்க்கும் விதமாகவும் சமீபத்தில் ‘தமிழ்நாடு மலையேற்ற திட்டத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்திருந்தார்.

மேலும், தமிழ்நாடு வன அனுபவ கழகம் மற்றும் தமிழ்நாடு வனத்துறையின் கூட்டு முன்னெடுப்பில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, மலையேற்ற திட்டத்தில் இயற்கை விரும்பும் ஆர்வலர்களில் முதல் குழுவினர் தற்போது ‘ட்ரெக்கிங்’ பயணத்தை தொடங்கினர். இந்த குழு தமிழகம் முழுவதும் 17 இடங்களில் மலையேற்றம் மூலம் பயணத்தை மேற்கொள்ள உள்ளது. இதுகுறித்து வனத்துறை அதிகாரி கூறியதாவது: மலையேற்ற பயணத்திற்கு எளிமை, மிதமானது, கடினம் என மூன்று வகையாக பிரித்துள்ளோம்.

அதில் கோவை மாவட்டத்தில் உள்ள பரலியார் வனப்பகுதியில் மலையேற்றத்தை முதல் குழு தொடங்கி இருக்கிறது. குறிப்பாக, காட்டு யானைகளால் சில இடங்களில் பயணம் தாமதமானது. இந்த மலையேற்ற திட்டம் ட்ரெக்கிங் செல்பவர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. முதன்முறையாக மலையேற்ற பயணம் மேற்கொள்பவர்களிடையே இது புதிய அனுபவத்தை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

தமிழகம் முழுவதும் 124 மலையேற்ற இடங்கள் வனத்துறையால் கண்டறியப்பட்டுள்ளன. அதில் 40 இடங்களில் மட்டும் இந்த பயணத்தை மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளன. அதன்படி, விருப்பம் உள்ளவர்கள் www.trektamilnadu.com என்ற இணையத்தளத்தில் தங்களின் விவரங்களை பதிவு செய்து மலையேற்றத்திற்கான நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளன. இதில் மலையேற்ற வகை மற்றும் தூரத்தை பொறுத்து கட்டணம் என்பது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாடு மலையேற்ற திட்டம் ட்ரெக்கிங் செல்பவர்களிடையே நல்ல வரவேற்பு: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: