கூடலூர் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள ஆர்கிடேரியங்களை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. ஆர்கிடேரியங்கள் ரூ.3 கோடியில் மேம்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் மதிவேந்தன் அறிவித்திருந்தார். அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் தற்போது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆனைமலையில் ஆர்க்கிட் காட்சி அறை, ஆர்கிடேரியம் சுற்றி உள்ள சூரிய மின்வேலியை பராமரித்தல் பணி மேற்கொள்ளப்படும். தற்போதுள்ள புகைப்படக் காட்சி அறையை SMART ஆக மேம்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும். கூடலூர் வனப் பிரிவு, நாடுகானி மலைத்தொடரின் ஜெனிபூல் தோட்டத்தில் விளக்க மையத்துடன் கூடிய ஆர்கிடேரியங்கள் மேம்படுத்தப்படும்.
மேற்குத் தொடர்ச்சி மலைகளின் உள்ளூர் மல்லிகைகளின் கண்ணாடி காட்சி, ஆர்க்கிட்களின் சேகரிப்பு, ஆவணப்படுத்தல் பணி மேற்கொள்ளப்படும். மேற்குத் தொடர்ச்சி மலையின் ஆர்க்கிட் வழிகாட்டியைத் தயாரித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை வனவிலங்கு காப்பாளர் ஆகியோரின் முன்மொழிவை அரசு கவனமாக ஆய்வு செய்த பின்னர், ரூ. 1.50 கோடிகள் சிவில் உள்கட்டமைப்பு உதிரிபாகங்களை மேம்படுத்துவதற்காக மேலும் கூடலூர் கோட்டம் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகங்களில் உள்ள ஆர்கிடேரியங்கள் மேம்படுத்தப்படும்.
The post புலிகள் காப்பகத்தில் உள்ள ஆர்கிடேரியங்களை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு appeared first on Dinakaran.