இந்நிலையில் தீபாவளிக்கு மறுநாள் அமாவாசை என்ற நிலையிலும் கூட, ஆட்டுக்கு டப் பைட் கொடுக்கும் வகையில், இம்முறை மதுரையில் அசைவப்பிரியர்களின் விருப்பத் தேர்வால் கறிக்கோழி இரு மடங்கு விற்பனைக்கு எகிறியுள்ளது. இதுகுறித்து மதுரை கறிக்கோழி விற்பனை மைய நிர்வாகி சிவகுமார் கூறும்போது, ‘‘தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையன்றும், மறுநாளும் என இரு நாட்களில் மட்டும் ரூ.200 கோடிக்கு மேல் கறிக்கோழி வர்த்தகம் நடந்திருக்கிறது.
கடந்த ஆண்டை விட இது 25 சதவீதம் அதிகரித்திருப்பதும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் மதுரையிலும் கறிக்கோழி விற்பனை கடந்த ஆண்டை விட தற்போது அதிகரித்துள்ளது. தீபாவளி தினத்தன்று 20 லட்சம் கிலோ அளவிற்கு மதுரையில் கறிக்கோழி விற்பனை நடந்திருக்கிறது. அதாவது, ரூ.10 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. பொதுவாக ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் மதுரை மாவட்டத்தில் 5 லட்சம் கிலோ கறிக்கோழி விற்பனை இருக்கும். ஆனால், தீபாவளி நாளில் இந்த விடுமுறை நாள் விற்பனையை விட பல மடங்கிற்கு விற்பனை நடந்திருக்கிறது.
மதுரை மாவட்டத்தில் மட்டும் கறிக்கோழி விற்பனை நிறுவனங்கள் 20க்கும் மேல் இருக்கிறது. பல்லடம், ஒட்டன்சத்திரம், காரியாபட்டி மற்றும் மதுரை மாவட்டத்தின் மேலூர், செக்கானூரணி, பாலமேடு பகுதிகளில் இருந்தும் கறிக்கோழி மதுரையில் விற்பனையாகிறது. இதன் விற்பனை சதவீதத்தை பார்க்கும்போது கடந்த ஆண்டை விட 20 சதவீதம் வரை பொதுமக்களிடம் கோழி இறைச்சி நுகர்வு அதிகரித்து, விற்பனை நடந்திருப்பது தெரிய வந்துள்ளது’’ என்றார்.
The post தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தில் கறிக்கோழி விற்பனை ரூ.200 கோடி appeared first on Dinakaran.