தாய்லாந்தின் புகட் நகருக்கு சென்னையில் இருந்து வாரத்தில் 3 நாள் விமான சேவை தொடக்கம்: எத்தியோப்பியா அடீஸ் அபாபா நகருக்கும் கூடுதல் விமானம்

சென்னை: தாய்லாந்து நாட்டின் கடற்கரை நகரான எழில் அழகு கொஞ்சும் புகட் நகருக்கு வாரத்தில் 3 நாட்கள் சென்னையில் இருந்து நேரடி விமான சேவை புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. அதோடு ஆப்பிரிக்கா நாடான எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா நகருக்கு வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்பட்ட விமான சேவை 4 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து நாட்டின் கடற்கரை எழில் அழகு கொஞ்சும் சுற்றுலாதலமான புகட் நகருக்கு சென்னையில் இருந்து வாரத்தில் 3 நாட்கள் நேரடி விமானத்தை தாய் ஏர் ஏசியா விமானம் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது.

வாரத்தில் புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய 3 நாட்கள் இந்த விமானங்கள் இயக்கப்படுகின்றன. அதுபோல், ஆப்பிரிக்கா நாடான எத்தியோப்பியா நாட்டு தலைநகர் அடிஸ் அபாபாவுக்கு, சென்னையில் இருந்து இதுவரையில் வாரத்தில் 3 நாட்கள் எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் விமான சேவைகளை இயக்கி வருகிறது. இந்த விமானத்திற்கு பயணிகள் இடையே நல்ல வரவேற்பும், அதோடு பயணிகள் கூட்டமும் அதிகமாக இருப்பதால் இப்போது இந்த விமானம் வாரத்தில் 4 நாட்கள் சென்னையில் இருந்து அடிஸ் அபாபாவிற்கு இயக்கப்படுகிறது.

அதிக விரைவில் இந்த விமானம் தினசரி விமானமாக இயக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம், சென்னை-கோவா-சென்னை இடையே நேற்று முதல் புதிதாக தினசரி விமானத்தை இயக்க தொடங்கியுள்ளது. அதேபோல, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் சென்னை- ஜெய்ப்பூர்- சென்னை இடையே புதிதாக தினசரி விமானத்தையும், சென்னை-புனே-சென்னை இடையே நேற்று முதல் புதிதாக மற்றொரு தினசரி விமானத்தையும் இயக்க தொடங்கியுள்ளது.

இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், குஜராத் மாநிலம் வதோராவிற்கு சென்னை-வதோரா-சென்னை இடையே புதிதாக வாராந்திர விமான சேவையை தொடங்கியுள்ளது. சென்னை விமான நிலையத்தில் 4 புதிய உள்நாட்டு விமான சேவைகளும், சர்வதேச முனையத்தில் இரண்டு புதிய விமான சேவைகளும் தொடங்கப்பட்டுள்ளது பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post தாய்லாந்தின் புகட் நகருக்கு சென்னையில் இருந்து வாரத்தில் 3 நாள் விமான சேவை தொடக்கம்: எத்தியோப்பியா அடீஸ் அபாபா நகருக்கும் கூடுதல் விமானம் appeared first on Dinakaran.

Related Stories: