அவருக்கு அடுத்த இடத்தை ரஷ்ய வீராங்கனை கடேரினா லேக்னோ 8.5 புள்ளிகளுடன் பிடித்தார். முதல் 8 இடங்களுக்குள் இடம் பிடித்த மற்ற 6 வீராங்கனைகள் தலா 8 புள்ளிகள் பெற்றிருந்தனர். புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்ததை அடுத்து வைஷாலி நாக்அவுட் போட்டியாக காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். காலிறுதியில் சீன வீராங்கனை ஸு ஜீனேருடன் வைஷாலி மோதவுள்ளார்.
ஓபன் பிரிவில் உலக நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சன் உட்பட 10 வீரர்கள் மோதினர். 11 சுற்றுகள் முடிவில் ரஷ்ய வீரர் இயான் நெபோம்னியாச்சி 9.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். கார்ல்சனுக்கு 3வது இடமே கிடைத்தது. இந்த போட்டியில் இந்தியாவுக்கு பின்னடைவாக, முதல் 8 இடங்களில் ஒரு இந்தியர் கூட இடம்பெற முடியவில்லை.
The post உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தமிழகத்தின் வைஷாலி காலிறுதிக்கு தகுதி: புள்ளிப் பட்டியலில் முதலிடம் appeared first on Dinakaran.