முதல் சுற்றில் 6-4 என்ற புள்ளிக் கணக்கில் சபலென்கா வென்றார். இரண்டாவது சுற்றில் ரெனாடாவால் ஒரு பாயின்ட் கூட பெற முடியவில்லை. இதனால் அந்த சுற்றிலும் 6-0 என்ற புள்ளிக் கணக்கில் சபலென்கா வெற்றி பெற்றார். இரு செட்களையும் தொடர்ந்து கைப்பற்றிய சபலென்கா 3வது சுற்றுக்கு தகுதி பெற்றார். அடுத்த சுற்றில் கசகஸ்தானின் யுலியா புடின்சேவாவுடன் மோதுவார்.
ஆண்கள் பிரிவில் நடந்த டென்னிஸ் போட்டியில் ஆஸ்திரேலியா வீரர் கைர்ஜியோஸ் – பிரான்ஸ் வீரர் கியோவன்னி பெட்ஷி பெர்ரிகார்ட் மோதினர். இரண்டரை மணி நேரம் பரபரப்பாக நடந்த அந்த போட்டியில் 7-6, 6-7, 7-6 என்ற செட் கணக்கில் கியோவன்னி வெற்றி பெற்றார்.
The post பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா அபார வெற்றி: 3வது சுற்றுக்கு தகுதி பெற்றார் appeared first on Dinakaran.