தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் எதிரொலி காரணமாக விமான டிக்கெட் கட்டணம் 4 மடங்கு அதிகரிப்பு

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர் செல்லும் பொதுமக்களால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலும் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. அதே நேரத்தில், சாதாரண நாட்களை விட 4 மடங்கு வரை விமான டிக்கெட் கட்டணம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம் ஆகிய பெருநகரங்களுக்கு செல்லும் விமான கட்டணங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளன. மேலும், வடமாநிலங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் உள்ள திருவனந்தபுரம், கொச்சி, ஐதராபாத், டெல்லி, கொல்கத்தா மற்றும் அந்தமான் ஆகிய இடங்களுக்கு செல்லும் விமான கட்டணங்களும் அதிகரித்துள்ளன.

சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு சாதாரண நாட்கள் கட்டணம் ரூ. 4,109. ஆனால், நேற்று ரூ. 8,976 முதல் ரூ. 13,317 வரை கட்டணம் பல மடங்கு அதிகரித்தது. இதுபோல மற்ற ஊர்களுக்கும் கட்டணம் 4 மடங்கு வரை அதிகரித்து காணப்பட்டது. விமான கட்டணங்கள் பல மடங்கு அதிகரித்தாலும், தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் குடும்பத்தினருடன் கொண்டாட வேண்டும் என்ற ஒரே ஆர்வத்தில், பயணிகள் டிக்கெட் கட்டண உயர்வை பொருட்படுத்தாமல் போட்டிப் போட்டுக் கொண்டு, விமான டிக்கெட்டுகள் எடுத்துக்கொண்டு, விமானங்களில் பயணம் செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

The post தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் எதிரொலி காரணமாக விமான டிக்கெட் கட்டணம் 4 மடங்கு அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: