அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வுக்கால பயன்களின் மதிப்பு கிட்டத்தட்ட ரூ. 3,000கோடி ஆகும். ஆனால், கிட்டத்தட்ட எட்டில் ஒரு பங்கு அளவுக்கு அதாவது 1,279 தொழிலாளர்களுக்கு மட்டுமே ரூ. 372.06 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்திருக்கிறது. ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் நலன்களை பாதுகாக்க இது எந்த வகையிலும் போதுமானதல்ல.ஓய்வு பெற்று 20 மாதங்களாகியும் ஓய்வுக்கால பயன்கள் கிடைக்காத நிலையில் அவர்கள் தாங்கள் வாங்கிய கடனுக்கு வீணாக வட்டி செலுத்திக் கொண்டிருக்கின்றனர்.
ஓய்வுக்கால பயன்கள் வழங்கப்பட்டாலாவது அவர்கள் அதைக் கொண்டு வாழ்க்கை நடத்த முடியும். ஆனால், ஓய்வுக்கால பயன்களும் கிடைக்காமல், ஓய்வூதியமும் இல்லாமல் வறுமையில் வாடிக்கொண்டிருக்கின்றனர். ஓய்வு பெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்கள் அனைவரும் தீப ஒளி திருநாளை மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் அவர்களுக்கான ஓய்வூதிய பயன்களை அரசு உடனடியாக வழங்க வேண்டும். இனிவரும் காலங்களில் ஓய்வு பெறும் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு அவர்கள் ஓய்வு பெறும் நாளில் ஓய்வுக்கால பயன்களை வழங்குவதை அரசு வழக்கமாக்க வேண்டும்.
The post போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஓய்வு பெறும் நாளில் ஓய்வுக்கால பயன்களை வழங்க வேண்டும்: அன்புமணி கோரிக்கை appeared first on Dinakaran.