பெரும்பான்மைக்கு 233 தொகுதிகள் தேவை என்ற நிலையில் ஆளும் கூட்டணி 215 இடங்களில் வெற்றி பெற்றது. இதனால் ஆட்சி அமைப்பது தொடர்பாக பிற கட்சிகளோடு பேச தயாராக இருப்பதாக பிரதமர் ஷிகெரு இஷிபா தெரிவித்தார். கெமைடோ கட்சி தலைவர் கைஷிசி சொந்த மாவட்டத்தில் தோல்வியுற்றார். பிரதான எதிர்க்கட்சியான ஜப்பானின் அரசமைப்பு ஜனநாயக கட்சி 148 தொகுதிகளை கைப்பற்றியது. கடந்த தேர்தலில் பெற்ற 98 இடங்களை காட்டிலும் 50 இடங்கள் கூடுதலாக அந்த கட்சிக்கு கிடைத்தன.
தேர்தல் முடிவு குறித்து பேசிய அக்கட்சியின் தலைவர் யூஷிஹிஹோ லோடாக் இது முடிவு அல்ல ஆரம்பம் என்றும் ஆட்சி அமைப்பது தொடர்பாக பிற எதிர்கட்சிகளோடு இணைந்து பணியாற்றி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். பிரதமர் ஷிகெரு இஷிபாவின் லிப்ரல் ஜனநாயக கட்சி 2009 ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பை பறிகொடுத்த பிறகு சந்தித்திருக்கும் மோசமான தோல்வி இதுவாகும். பணவீக்கம் ஆளும் கட்சியினரின் நிதி மோசடிகள் உள்ளிட்ட காரணங்கள் லிப்ரல் ஜனநாயக கட்சி ஆட்சியை இழந்ததாக கூறப்படுகிறது . உலகின் 4வது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடான ஜப்பானில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது.
The post ஜப்பான் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் லிபரல் ஜனநாயக கட்சி கூட்டணி படுதோல்வி: எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை appeared first on Dinakaran.