ஒவ்வொரு தீபாவளி அன்றும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அயோத்தியில் தீப உற்சவத்தை நடத்துவது வழக்கம். அவர், அயோத்தி ராமர் கோயிலை ஒட்டிய சரயு நதிக்கரையில் 8வது தீப உற்சவத்தை கொண்டாட உள்ளார். அப்போ 25 லட்சம் முதல் 28 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டு புதிய உலக சாதனை படைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக உபி அரசு தெரிவித்துள்ளது. தீப உற்சவத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
தீப உற்சவத்தில் பயன்படுத்தப்படும் விளக்குகள் நீண்ட நேரம் எரியும் வகையிலும், புகை கறை படியாத வகையிலும் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளன. மேலும் சிறப்பு மெழுகு பயன்படுத்தப்பட்டு கார்பன் உமிழ்வும் குறைக்கப்பட உள்ளது. ராமர் கோயில் வளாகம் முழுவதும் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட உள்ளது. தீபாவளியையொட்டி நாளை முதல் நவம்பர் 1 வரை நள்ளிரவு வரை ராமர் கோயில் திறந்திருக்கும்.
The post உலக சாதனை படைக்க ஏற்பாடு அயோத்தி ராமர் கோயிலில் முதல் தீபாவளி கொண்டாட்டம் appeared first on Dinakaran.