இயற்கை பாதுகாப்பு குறியீட்டில் 176வது இடத்தில் இந்தியா: பாஜவுக்கு காங்கிரஸ் கேள்வி

புதுடெல்லி: இயற்கை பாதுகாப்பு குறியீட்டில் இந்தியா 176வது இடத்தில் இருப்பது பற்றி பாஜவை காங்கிரஸ் விமர்சித்துள்ளது. உலக இயற்கை பாதுகாப்பு குறியீடு என்பது நில மேலாண்மை, ஆளுமை மற்றும் திறன், எதிர்கால போக்குகள், உயிரியல் பன்முகத்தன்மைக்கு எதிரான அச்சுறுத்தல் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. 2024ம் ஆண்டுக்கான உலக இயற்கை பாதுகாப்பு குறியீடு கடந்த வியாழக்கிழமை வௌியிடப்பட்டது. 180 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் இந்தியா 176வது இடத்தில் உள்ளது.

நில மேலாண்மை, ஆளுமை மற்றும் திறன், எதிர்கால போக்குகள், உயிரியல் பன்முகத்தன்மைக்கு எதிரான அச்சுறுத்தல் அளவு ஆகிய மதிப்பீட்டுகளின் 100 என்ற உச்ச அளவில் இந்தியா 45.5 மதிப்பெண்கள் பெற்று 176வது இடம்பிடித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக மைக்ரோனேசியா 177வது இடத்திலும், ஈராக் 178வது இடம், துருக்கி 179வது இடம், கிரிபாட்டி 180வது இடம்பிடித்துள்ளன.

இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் எக்ஸ் தள பதிவில், “உலகளாவிய இயற்கை பாதுகாப்பு குறியீட்டு எண்களில் இந்தியா மிகக்குறைந்த எண்களை பெறும்போதெல்லாம் உயிரியல் பிறப்பல்லாத மோடிக்கு ஆதரவளிப்போர் இது இந்தியாவை இழிவுப்படுத்துவதற்கான ஒரு சதி என்று குறியீட்டையே தாக்குவார்கள்.

ஆனால் இப்போது வௌியிடப்பட்ட இயற்கை பாதுகாப்பு குறியீட்டில் இந்தியா பரிதாபகரமான 176வது இடத்தில் இருப்பதற்கு என்ன பதில் சொல்ல போகிறார்கள். இந்த குறியீட்டை இணைந்து உருவாக்கிய இஸ்ரேலின் பெங்குரியன் பல்கலை கழகத்தின் உண்மைத்தன்மையையும் பாஜ கேள்விக்குட்படுத்துமா?” என கேள்வி எழுப்பி உள்ளார்.

The post இயற்கை பாதுகாப்பு குறியீட்டில் 176வது இடத்தில் இந்தியா: பாஜவுக்கு காங்கிரஸ் கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: