சாம்சங் நிறுவன தொழிலாளர் பிரச்னைக்கு தீர்வு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் நன்றி

சென்னை: சாம்சங் நிறுவனத்தின் தொழிலாளர்கள் பிரச்னைக்கு சுமுக தீர்வு ஏற்பட்டதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலினை திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள முதல்வரின் முகாம் அலுவலகத்தில் சாம்சங் நிறுவனத்திற்கும் தொழிலாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனைக்கு இணைக்கமான தீர்வு காணப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.கோபாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் நேரில் சந்தித்து நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.

இதன் பின்னர், கே.பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: சாம்சங் நிறுவனத்தின் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கையை முன்னிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். குறிப்பாக 37 நாட்கள் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடந்தது. இடைப்பட்ட நேரத்தில் திமுக கூட்டணி கட்சிகள், முதல்வரை சந்தித்து சுமுக தீர்வு ஏற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம் அதற்கு பிறகு பேச்சுவார்த்தைக்கு 4 அமைச்சர்களை அனுப்பி கடந்த 15ம் தேதி சுமூக தீர்வு ஏற்பட்டது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக முதல்வரை சந்தித்தோம். அத்துடன் 4 அமைச்சர்களையும் சந்தித்து நன்றி தெரிவித்தோம்.மேலும் நிறுவனத்தில் சங்கங்கள் தொடங்க வேண்டும் என வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது, அதனை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போராட்டத்தின்போது சில தொழிலார்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அதனை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். தொழிற்சாலை வளர்ச்சி அவசியம். அதேசமயம் தொழிலாளர்கள் நலனும் அவசியம் என தெரிவித்திருக்கிறோம். என்றார்.

The post சாம்சங் நிறுவன தொழிலாளர் பிரச்னைக்கு தீர்வு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் நன்றி appeared first on Dinakaran.

Related Stories: