ஆஸ்திரேலிய பெண் எம்பி எதிர்ப்பு; கடந்த காலத்தை யாராலும் மாற்ற முடியாது: காமன்வெல்த் மாநாட்டில் மன்னர் சார்லஸ் பதில்

வெலிங்டன்: கடந்த காலத்தை யாராலும் மாற்ற முடியாது என்று காமன்வெல்த் மாநாட்டின் தொடக்க விழாவில் மன்னர் சார்லஸ் பேசினார். இங்கிலாந்து மன்னர் சார்லஸ் சமீபத்தில் ஆஸ்திரேலியா நாடாளுமன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அந்த நாட்டு பூர்வகுடி பெண் எம்பி லிதியா தோர்ப் மன்னர் சார்லசை பார்த்து,’ நீங்கள் எங்கள் நாட்டை சீரழித்து விட்டீர்கள். இது உங்களுடைய நாடு அல்ல. நீங்கள் எங்கள் மன்னரும் அல்ல. எங்கள் நாட்டில் திருடியதை திருப்பி கொடுங்கள்’ என்று கோஷமிட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் பசிபிக் பெருங்கடலில் உள்ள சமோவா தீவில் காமன்வெல்த் தலைவர்களின் 2 நாள் மாநாடு நேற்று தொடங்கியது.

இதில், பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் பேசுகையில்,’கடந்த காலத்தின் மிகவும் வேதனையான அம்சங்கள் தொடர்ந்து எதிரொலித்து வருவதை புரிந்து கொண்டேன். கடந்த காலத்தை யாராலும் மாற்ற முடியாது. ஆனால் அதன்படிப்பினைகளை கற்றுக்கொள்வதற்கும் நீடித்திருக்கும் ஏற்றதாழ்வுகளை சரி செய்வதற்கான ஆக்கப்பூர்வமான வழிகளை கண்டுபிடிப்பதற்கும் நாம் முழு மனதுடன் அர்ப்பணிக்க முடியும்’ என்றார். பிரிட்டன் பிரதமர் கெய்ர்ஸ்டார்மர்,’ பகிரப்பட்ட வரலாற்றை ஒப்பு கொள்வது முக்கியம். இங்குள்ள உணர்வின் வலிமையை புரிந்து கொண்டேன். கடந்த காலத்தின் தீங்குகள், அநீதிகளை நீதியின் மூலம் ஈடு செய்வதற்கு சில வழிமுறைகள் உள்ளன’ என்றார்.

The post ஆஸ்திரேலிய பெண் எம்பி எதிர்ப்பு; கடந்த காலத்தை யாராலும் மாற்ற முடியாது: காமன்வெல்த் மாநாட்டில் மன்னர் சார்லஸ் பதில் appeared first on Dinakaran.

Related Stories: