திருப்பதி மாவட்டத்தில் மகளிர் குழு கூட்டம் குழந்தை திருமணங்களை தடுக்க அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்

*மாவட்ட வருவாய் அதிகாரி உத்தரவு

திருப்பதி : குழந்தை திருமணங்களை தடுக்க அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று மாவட்ட வருவாய் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
திருப்பதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி பெஞ்சல கிஷோர் தலைமையில் பேட்டி பச்சாவ் மற்றும் பேட்டி படாவோ பெண் குழந்தைகளை காப்போம் – பெண் குழந்தைக்கு கல்வி கற்போம் என்ற தலைப்பில் மாவட்ட அதிகாரிகளுடன் மகளிர் சக்தி குழு கூட்டம் மாவட்ட மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு கழகம் சார்பில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி பெஞ்ச கிஷோர் பேசியதாவது: குழந்தை பாலின விகிதத்தை அதிகரிப்பது, பாலின பாகுபாட்டை அகற்றுவது, பெண் குழந்தைகளை பாதுகாத்தல், கல்வி கற்பது ஆகியவையே பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். கருக்கொலை, குழந்தை திருமணங்களை தடுக்க அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

பெண் குழந்தை பிறப்பதை அதிர்ஷ்டமாக கருத வேண்டும். பெண் குழந்தைகளை ஆண் குழந்தைகளுடன் சமமாக வளர்க்க வேண்டும். ஸ்கேனிங் மையங்களில் மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தனிக்கவனம் செலுத்த வேண்டும். எந்தக் குழந்தை பிறக்கும் என்பதை அறிய முயல வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் மற்றும் அதிகாரமளித்தல் அலுவலர் செல்வி.ஜெயலட்சுமி பேட்டி பச்சாவோ – பேட்டி படாவோ திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து விளக்கினார்.

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். பெண் குழந்தைகள் நன்றாக படித்து சொந்த காலில் நிற்க வேண்டும், எந்த துறையிலும் ஆண்களுக்கு இணையாக வளர வேண்டும் என மகளிர் காவல் நிலைய ஸ்ரீலதா டிஎஸ்பி தெரிவித்தார்.

சிறுவர்களுக்கு பள்ளி, கல்லூரிகளில் நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அவசியம் குறித்து வலியுறுத்தினார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டி சான்றிதழ்களை மாவட்ட வருவாய் அதிகாரி வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறைத் தலைவர்கள் மற்றும் மிஷன் வாத்சல்யா ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post திருப்பதி மாவட்டத்தில் மகளிர் குழு கூட்டம் குழந்தை திருமணங்களை தடுக்க அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: