டெல்லி: தீபாவளி மற்றும் சாத் பூஜையை முன்னிட்டு நாடுமுழுவதும் சுமார் 7000 சிறப்பு ரயில்களை இயக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. இதன் மூலம் தினசரி கூடுதலாக 2 லட்சம் பேர் பயணிக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.