கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கவிதை, திரைப்பட வசனங்கள் ஒப்பித்தல் போட்டி

 

திருச்சி.அக்.25: திருச்சியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கலைஞரின் கவிதைகள், திரைப்பட வசனங்கள் ஒப்பித்தல் போட்டியில் பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மத்திய மாவட்டம் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் மாவட்ட அமைப்பாளர் துரை கந்தசாமி ஏற்பாட்டில் பள்ளி மாணவ மாணவியருக்கான முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் கவிதைகள் திரைப்பட வசனங்கள் ஒப்பித்தல் போட்டி நேற்று நடைபெற்றது.

இப்போட்டியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்த போட்டியில் முனைவர், பேராசிரியர் ஜோதிலட்சுமி, உதவி பேராசிரியர் பிராங்கிளின் தேவராஜ், தலைமை ஆசிரியர் கீதா ஆகியோர் நடுவர்களாக கலந்து கொண்டனர். இந்த போட்டியில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு கலைஞரின் கவிதைகள், திரைப்பட வசனங்களை பேசி தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர மேயர் அன்பழகன், மாநில துணை செயலாளர் எழில்மாறன் செல்வேந்திரன், லால்குடி நகராட்சி தலைவர் துரை மாணிக்கம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கவிதை, திரைப்பட வசனங்கள் ஒப்பித்தல் போட்டி appeared first on Dinakaran.

Related Stories: