விராலிமலையில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்களுக்கு வழிகாட்டு நெறிமுறை பயிற்சி முகாம்

 

விராலிமலை,அக்.25: விராலிமலை வட்டார வள மையத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் 100 சதவீதம் கற்போரை உறுதி செய்யும் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து தன்னார்வலர்களுக்கு மாநில தொழில்நுட்ப வல்லுநர் ரகுராமன் பயிற்சி அளித்தார். புதிய பாரத எழுத்தறிவு திட்டம் என்பது 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுதப் படிக்க தெரியாதவருக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வியை வழங்கும் நோக்கில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் (2022 – 2027) என்கிற வயது வந்தோருக்கான புதிய கல்வி திட்டம் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இவர்களுக்கான பயிற்சி கையேடு ஏற்கனவே தயாரித்து வழங்கப்பட்டது. தினமும் இரண்டு மணி நேரம் வீதம் 6 மாத காலத்திற்கு பயிற்சி வழங்கப்படும். சுமார் 200 மணி நேரம் கற்பித்தல் நிகழும். பயிற்சி பெற்ற தன்னார்வலர்களைக் கொண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கிராமம், நகர் பகுதிகளில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் 15 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் முதல் கட்டமாக தேர்வு செய்யப்படுகிறார்கள். 2027-ம் ஆண்டுக்குள் 5 கோடி பேருக்கு கல்வி கற்பிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய தேசிய கல்விக் கொள்கை 2020-ன் பரிந்துரை அடிப்படையில் வயது வந்தோருக்கான புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தை ஒன்றிய அரசு அமல்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் சார்பில் இப்பணி நடைபெற்று வருகிறது. பாரத எழுத்தறிவு திட்டத்தில் 100 சதவீதம் கற்போரை உறுதி செய்ய வழிகாட்டுதல் வழிமுறைகள் குறித்து தன்னார்வலர்கள் பயிற்சி விராலிமலை வட்டார வள மையத்தில் நடைபெற்றது இதில் தன்னார்வலர்கள், திட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.

The post விராலிமலையில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்களுக்கு வழிகாட்டு நெறிமுறை பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Related Stories: