பொன்னமராவதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

 

பொன்னமராவதி,அக்.25: பொன்னமராவதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. பொன்னமராவதியில் ராயல் லயன்ஸ் சங்கம் சார்பில் ஆளுநர் வருகை விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு ராயல் லயன்ஸ் சங்கத்தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். செயலாளர் திருப்பதி, பொருளாளர் அன்புச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட ஆளுநர் சபரிராஜ் நடைபாதை வியாபாரிகளுக்கு தள்ளுவண்டி, ஏழ்மை நிலையில் உள்ளோருக்கு அரசி சிப்பம், ஹெல்மெட் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதில் மாவட்ட நிர்வாக அலுவலர் ஸ்டாலின், மண்டலத்தலைவர் பரணிக்குமார், வட்டாரத்தலைவர் பாலகிருஸ்ணன், நிர்வாகிகள் பாபு, முருகாணந்தம், மாணிக்கவேல், முல்லைதங்கராசு, பழனியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post பொன்னமராவதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல் appeared first on Dinakaran.

Related Stories: