சத்தியமங்கலம், அக்.25: சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட உக்கரம் ஊராட்சி மில்மேடு, புதுமல்ல நாயக்கனூர் ஆகிய இரு கிராமங்களில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.33.50 லட்சம் மதிப்பில் தலா 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் கட்டப்பட்டது. இந்த இரண்டு மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் இளங்கோ தலைமை தாங்கி குடிநீர் தொட்டிகளை திறந்து வைத்து குடிநீர் விநியோகத்தை தொடங்கி வைத்தார். உக்கரம் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் அப்துல் வகாப் வரவேற்றார். நிகழ்வில் ஒன்றிய கவுன்சிலர்கள் சம்பத்குமார், சரோஜா செந்தில்குமார், ஒன்றிய துணைச் செயலாளர் அசோகன், கோணமூலை ஊராட்சி தலைவர் குமரேசன் (எ) செந்தில்நாதன், உக்கரம் முன்னாள் ஊராட்சி தலைவர் நாகேஷ், வார்டு உறுப்பினர்கள், ஊர்ப்பொது மக்கள் கலந்து கொண்டனர்.
The post உக்கரம் ஊராட்சியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் திறப்பு appeared first on Dinakaran.